×

கழுகுமலை அருகே ரூ.58.29 லட்சத்தில் புதிய கட்டிடங்கள்

கழுகுமலை, பிப்.12: கழுகுமலை அருகே ரூ.58.29 லட்சத்தில் புதிய கட்டிடங்கள் திறப்பு விழா நடந்தது.   கயத்தாறு மேற்கு ஒன்றியத்துக்குட்பட்ட கம்மாப்பட்டி, திருமங்கலக்குறிச்சி கிராமங்களில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் தலா ரூ.5 லட்சத்தில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை, ஆவுடையம்மாள்புரத்தில் ரூ.14.25 லட்சத்தில் கட்டப்பட்ட பள்ளி கட்டிடம், ரூ.9.04 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி ஆகியவற்றின் திறப்புவிழா நடந்தது. அமைச்சர் கடம்பூர் ராஜு தலைமை வகித்து கட்டிடங்களை திறந்து வைத்து பேசினார்.  தொடர்ந்து, வெள்ளாளங்கோட்டையில் எம்எல்ஏ  தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.33 லட்சத்தில் சமுதாயகூடத்துக்கு அமைச்சர் அடிக்கல் நாட்டினார். பின்னர், ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.25 லட்சத்தில் கட்டப்பட்ட செவிலியர்கள் குடியிருப்பை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார். வலசால்பட்டி, ஆவுடையம்மாள்புரம், ராமநாதபுரம், பட்டியூர் ஆகிய ஊர்களில் நகரும் ரேஷன்கடையை திறந்து வைத்து பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்கினார்.  நிகழ்ச்சிகளில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மருத்துவர் அனிதா, மாவட்ட பஞ்.கவுன்சிலர் பிரியா குருராஜ், மாவட்ட ஜெ.பேரவை செயலாளர் செல்வக்குமார், ஜெ.பேரவைத் தலைவர் மாரியப்பன், நகர ஜெ.பேரவை செயலாளர் மாரியப்பன், கயத்தாறு மேற்கு ஒன்றிய செயலாளர் வினோபாஜி, மாணவரணி செயலாளர் நவநீதிகிருஷ்ணன், தகவல் நுட்பப்பிரிவு செயலாளர் பிரபாகரன், கழுகுமலை நகர செயலாளர் முத்துராஜ், ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் பாலமுருகன், மாவட்ட மாணவரணி இணை செயலாளர் குருராஜ், முருகன் கூட்டுறவு வங்கி தலைவர் கருப்பசாமி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் முத்தையா, வேலாயுதபுரம் கூட்டுறவு சங்கத்தலைவர் சுப்புராஜ், செட்டிகுறிச்சி கிருஷ்ணசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.



Tags : buildings ,Kalugumalai ,
× RELATED இலவச பட்டா வழங்கிய இடத்தில் குடியேறி பொதுமக்கள் போராட்டம்