திருச்செந்தூர் அருகே கடலில் மீட்கப்பட்ட மீனவர்களுக்கு அனிதாராதாகிருஷ்ணன் எம்எல்ஏ ஆறுதல்

திருச்செந்தூர், பிப். 12: படகு இயந்திர கோளாறினால் கடலில் தவித்து, மீட்கப்பட்ட அமலிநகர் மீனவர்களை அனிதாராதாகிருஷ்ணன் எம்எல்ஏ சந்தித்து ஆறுதல் கூறினார்.திருச்செந்தூர் அமலிநகரைச் சேர்ந்த மீனவர்களான விஜயபாஸ்கர்(38), ஸ்டீபன்(42), மணிவண்ணன்(48), பவித்ரன்(23) ஆகியோர் நேற்று முன்தினம் அதிகாலையில் நாட்டுப் படகில் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர். அன்று மாலை அவர்கள் கரை திரும்பாததால், அமலிநகர், ஆலந்தலை மீனவர்கள் 3 படகுகளில் கடலுக்குள் சென்று தேடினர். நேற்று காலை அவர்கள் உவரி பகுதியில் படகு இயந்திர கோளாறினால் கரை திரும்ப முடியாமல் தத்தளித்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்களை சக மீனவர்கள் படகில் சென்று மீட்டு வந்தனர். நேற்று காலை மீட்கப்பட்ட 4 மீனவர்களை அனிதாராதாகிருஷ்ணன் எம்எல்ஏ சந்தித்து ஆறுதல் கூறினார். நிகழ்ச்சியில் அமலிநகர் பங்குதந்தை ரவீந்திரன் பர்னாண்டோ, திமுக மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், நகர பொறுப்பாளர் வாள்சுடலை, மாவட்ட துணை அமைப்பாளர்கள் சுதாகர், டெண்டுல்கர், இளங்கோ மற்றும் ஊர் பொதுமக்கள் உடனிருந்தனர்.

Related Stories:

>