×

கிரேஸ் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் துவக்கம்

தூத்துக்குடி, பிப் 12: தூத்துக்குடி கிரேஸ் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் துவங்கியது. கல்லூரியின் செயலர் பெட்ரோ ஜோஸ்வா ஆரம்ப ஜெபம் செய்து துவக்கி வைத்தார். இயற்பியல் துறை பேராசிரியை ஜினிகமல் ஈஸ்ட்ரோ வரவேற்றார். கல்லூரியின் தலைவர் ஜோஸ்வா தலைமை வகித்து பேசினார். தொடர்ந்து அறிவியல் துறைத்தலைவர் ஆண்டனிரெக்ஸ் பேராசிரியர்களை மாணவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
 கிரேஸ் கல்லூரியின் சார்பில் பிளஸ்2 மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் நடத்திய கிளிக் அண்ட் வின் என்ற பொது அறிவுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கல்லூரியின் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜீவா ஸ்டீபன் பரிசினை வழங்கினார்.
முதல்பரிசை கோவை எஸ்ஆர்எஸ்ஐ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் டென்சில் பிரிட்டோவும், 2ம் பரிசை மாணவர் ராஜவேலும், 3வது பரிசை திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீசங்கர அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த தேசாய் ஜெபசும் பெற்றனர். பின்னர் முதல்வர் ரிச்சர்ட் கல்லூரியின் நெறிமுறைகளை மாணவர்களுக்கு வழங்கினார். ஆங்கிலத்துறை பேராசிரியர் ராஜேஸ்வரி தொகுத்து வழங்கினார். வேதியியல் துறை பேராசிரியர் சிவக்குமார் நன்றி கூறினார்.

Tags : Commencement ,classes ,Grace College of Engineering ,
× RELATED ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரமோற்சவ...