தை அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு திதி கொடுத்த மக்கள்

மேட்டூர், பிப்.12: தை  அமாவாசையை முன்னிட்டு, மக்கள் தங்களது முன்னோர்களுக்கு நீர்நிலைகளில் திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தனர். மேட்டூர் அணையின் காவிரி பாலம், காவிரி  படித்துறையில் சேலம், தர்மபுரி, ஈரோடு மாவட்டங்களில் இருந்து வந்த மக்கள் திதி கொடுத்தனர். வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஓத எள், அரிசி, மாவு  கலந்து பிண்டம் பிடித்து அதனை ஆற்றில் விட்டு வணங்கினர். பின்னர் ஆற்றில்  புனித நீராடி விட்டு சென்றனர். இதேபோல், இடைப்பாடி அருகே கல்வடங்கம், கோனேரிப்பட்டி, பூலாம்பட்டி, காவேரிபட்டி  அண்ணமார் கோயில் ஆகிய பகுதிகளில் காவிரியாற்றில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

Related Stories:

>