×

வீராணம் அருகே பெண் லேப் டெக்னீசியன் காதல் தோல்வியால் தற்கொலை உருக்கமான டைரி சிக்கியது

சேலம், பிப்.12: கடலூர் அருகேயுள்ள சேத்தியாத்தோப்பு கிழாங்காடு பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரது மகள் கார்த்திகா(25). லேப் டெக்னீசியனான இவர், சேலம் வலசையூரில் மணிவாசகம் தெருவில் உள்ள லட்சுமி என்பவரது வீட்டில் தங்கி பணியாற்றி வந்தார். நேற்று காலை, நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் வீட்டின் உரிமையாளர் கதவை தட்டிப்பார்த்தார். எந்த சத்தமும் இல்லாததால் அருகில் இருந்தவர்களை அழைத்து வந்து, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, அங்கு அவர் மின்விசிறியில் கார்த்திகா தூக்கில் சடலமாக தொங்கினார்.

இதுகுறித்த தகவலின் பேரில், சம்பவ இடம் வந்த வீராணம் போலீசார், சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். அங்கு டைரி ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதில், பெற்றோரை மிஸ் செய்கிறேன் என குறிப்பிட்டுள்ள அவர், விஜய் ஐ லவ் யூ எனவும், எனக்காக ஒரு நாள் கண்ணீர் வடிப்பாய்’ எனவும் எழுதியுள்ளார். அருகில் வெளிநாட்டு போன் நம்பரும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, விஜய் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் தோல்வியின் காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து கடலூரில் உள்ள அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கார்த்திகாவின் சகோதர் மற்றும் உறவினர்கள் வந்து உடலை பெற்றுச்சென்றனர்.

Tags : lab technician ,Veerana ,
× RELATED சென்னை ராஜீவ் காந்தி அரசு...