×

பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கூட்டுறவு சங்கம் முன்பு கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

திருச்செங்கோடு, பிப்.12: எலச்சிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் முன், பாரபட்சமின்றி விவசாயிகளுக்கு பயிர் கடன் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசு விவசாயிகளுக்கான பயிர் காப்பிடு கடன் 31.1.2021 வரை கடன் பெற்றுள்ள பயனாளிகளுக்கு கடன் தள்ளுபடி செய்கிறோம் என அரசு வெளியிட்டது. ஆனால் எலச்சிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில், கடன் கட்ட கால அவகாசம் இருந்தும் முன்கூட்டியே கடனை கட்ட சொல்லியும், வரவு வைத்தும் மீண்டும் பயிர் கடன் தராமல் காலதாமதம் ஏற்படுத்தியதால், எலச்சிபாளையம் விவசாயிகள் 100க்கும் மேற்பட்ட விவாசாயிகள் கடன் தள்ளுபடி திட்டத்தில் இடம்பெறாமல் பாதிக்கபட்டுள்ளனர்.

ஆகவே 31.1.2021 வரை கடன் காலம் உள்ளவர்களுக்கு தள்ளுபடி பட்டியலில் பெயர்கள் சேர்க்க வேண்டும், முன்கூட்டியே வசூல் செய்து மீண்டும் கடன் தராமல் செய்த அதிகாரிகள் மீதும்  கூட்டுறவு செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்திற்கு, தொடக்க வேளாண்மை கூட்டுறவு இயக்குனர் மாரிமுத்து தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வேலுசாமி, ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சுரேஷ்.  வெங்கடாசலம், ரமேஷ் மற்றும் விவசாயிகள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : demonstration ,Co-operative Society ,
× RELATED புத்தன்தருவை கூட்டுறவு சங்கத்தின் வளர்ச்சி நிதி வழங்கல்