புதுச்சத்திரத்தில் வங்கியாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி முகாம்

சேந்தமங்கலம், பிப்.12: புதுச்சத்திரம் ஒன்றிய அலுவலகத்தில், வங்கியாளர்களுக்கான ஒரு நாள் புத்தாக்க பயிற்சி நடந்தது. நாமக்கல் மகளிர் உதவி திட்ட அலுவலர் உமாசுந்தரி தலைமை தாங்கினார். புதுவாழ்வு திட்ட செயல் அலுவலர் ராஜேந்திரன், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் திருப்பி செலுத்துவதில் ஏதேனும் காலதாமதம் இருப்பின், உடனடியாக நிவர்த்தி செய்ய நிர்வாகத்தின் சார்பில் ஒத்துழைப்பு வழங்கப்படும். மகளிர் மேம்பாட்டிற்கு கிராமப்புற வங்கிகள் முக்கியத்துவம் அளித்து வருகிறது. மகளிர் சுய உதவி குழுக்கள்  கடன் தவணை தொகையை தவறாமல் செலுத்தி வங்கிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பேசினார். பயிற்சியில் பிடிஓக்கள் பிரபாகரன், வனிதா, புதுச்சத்திரம் வட்டார வங்கி மேலாளர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

More