திருச்செங்கோடு ரோட்டரி சங்க கவர்னர் வருகை விழா

திருச்செங்கோடு, பிப்.12: திருச்செங்கோட்டில் ரோட்டரி கவர்னர் அதிகார பூர்வ வருகை விழா நடந்தது. ரோட்டரி கவர்னர் வெங்கடேசன், ரோட்டரி  மாவட்டத்தின் முதல் பெண்மணி ஸ்ரீபிரியா வெங்கடேசன், துணை கவர்னர் பாலாஜி, மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். திருச்செங்கோடு ரோட்டரி சங்க தலைவர் வாட்டர் பிரகாஷ் தலைமை வகித்தார். செயலாளர் தனசேகரன் சேவைத் திட்டங்களை விளக்கினார். திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம், 4 மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை தலா ₹5 ஆயிரம், பொம்மன்பட்டி அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு தையல் இயந்திரம், சூரியம்பாளையம் நடுநிலைப்பள்ளிக்கு ₹10 ஆயிரம் மதிப்பில் பீரோ வழங்கப்பட்டது.சங்கத்தின் 44ம் ஆண்டையொட்டி, மத்திய அரசு சிறப்பு அஞ்சல் தலை, ரோட்டரி மாத இதழ் வெளியிடப்பட்டது. தொடர்ந்து, 25 ஆண்டு சங்க உறுப்பினர்கள் கௌரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சியில், முன்னாள் மாவட்ட கவர்னர் சண்முகசுந்தரம், முன்னாள் துணை கவர்னர்கள் பயனியர் ஞானசேகரன், கோகுலநாதன், அண்ணாதுரை மற்றும் முன்னாள் தலைவர்கள் ஜெகதீசன், செங்குட்டுவன், பிரகாசம், வையாபுரி, செங்கோட்டுவேல், அங்கமுத்து, மதியழகன், செங்கோட்டையன், ரமேஷ், நவலடி, கார்த்திகேயன் மற்றும் உறுப்பினர்கள், இன்னர்வீல் சங்கத் தலைவி வசந்தி செங்கோட்டுவேல் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>