மாயமான இளம்பெண் திருப்பூரில் மீட்பு

சேந்தமங்கலம், பிப்.12: புதன்சந்தை அருகே அண்ணாநகரை சேர்ந்தவர் இந்துமதி(24). கடந்த சில மாதங்களுக்கு முன், கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன், மளிகை கடைக்கு சென்ற இந்துமதி மீண்டும் வீடு திரும்பவில்லை. பெற்றோர் சேந்தமங்கலம் போலீசில் புகார் செய்தனர். இதன் பேரில், இன்ஸ்பெக்டர் சுகுமார் விசாரித்து வந்தார். இந்நிலையில், இந்துமதி திருப்பூரில் இருந்துபோலீசார், மீட்டனர். அதில் பெற்றோர்கள் தனக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க முயற்சி செய்வதால், தோழி வீட்டிற்கு சென்றதாக தெரிவித்துள்ளார்.

Related Stories:

>