×

மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆய்வகத்தை அடித்து நொறுக்கிய நோயாளி ரூ.8 லட்சம் கருவிகள் சேதம்

விருதுநகர், பிப்.12 : விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ரத்த பரிசோதனை மையத்திற்கு அதிகாலை புகுந்த நோயாளி ரூ.8 லட்சத்திற்கும் அதிக மதிப்பிலான கருவிகளை அடித்து நெறுக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சாத்தூர் படந்தால் அண்ணாநகரை சேர்ந்த சுப்புராஜ் மகன் பாண்டி(38), சிவகாசி அச்சகத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் அனிதா என்ற பெண்ணிற்கும் திருமணமாகி 15 வருடங்களாக குழந்தை இல்லை. இதனால் கடந்த ஆண்டு  அனிதா பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மனைவி இறந்த துக்கத்தில் பாண்டி மதுவிற்கு அடிமையாகி உள்ளார். இதனால் வயிற்று வலி ஏற்பட்டு கடந்த 8ம் தேதி சாத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மாலை மேல் சிகிச்சைக்கு விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார். நேற்று அதிகாலை 2 மணியளவில் மருத்துவமனையில் இருந்து தப்பி, மருத்துவமனை அருகில் உள்ள இளங்கோவன் தெருவில் ஒரு  வீட்டிற்குள் புகுந்துள்ளார். திருடன் என நினைத்து அங்கிருந்தவர்கள் பிடித்து அடித்து கிழக்கு போலீசில் ஒப்படைத்துள்ளனர்.

போலீசார் விசாரணையில், மருத்துவமனையில் இருந்து தப்பியது தெரிய, மீண்டும் அதிகாலை 4.15 மணியளவில்  மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்துள்ளனர். நேற்று காலை 6 மணியளவில் சிகிச்சை அறையில் இருந்து வெளியேறி மருத்துவமனை ரத்த பரிசோதனை மையத்திற்குள் புகுந்து, அங்கிருந்த இரவு பணியாளர் காமாட்சியை வெளியேற்றி பாண்டி அறையை பூட்டிக் கொண்டார். அங்கிருந்த இரும்பு நாற்காலியால் ரூ. 6 லட்சம் மதிப்பிலான இரு ரத்த பகுப்பாய்வு மிஷின்கள், ரூ.1.50 லட்சம் மதிப்பிலான ஹெச்ஐவி பரிசோதனைக்கான எலிசா பரிசோதனை மிஷின் ஒன்று, ரூ.50 ஆயிரம் மதிப்பிலான கணினி மற்றும் ஆய்வ கருவிகள், ரத்த பரிசோதனை மாதிரிகள் என ரூ.8 மதிப்பிலான கருவிகளை அடித்து தூள், துளாக்கி உள்ளார். மருத்துவமனை பணியாளர்கள் அறையை உடைத்து பாண்டியை பிடித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இது தொடர்பாக கிழக்கு போலீசில் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் அரவிந்த் பாபு அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டி மனநோயாளியா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

Tags : patient ,laboratory ,Medical College Hospital ,
× RELATED புதுச்சேரி ஜிப்மரில் நாளை...