ராஜபாளையத்தில் மினி கிளினிக் திறப்பு

ராஜபாளையம், பிப். 12:  ராஜபாளையம் சம்மந்தபுரம் மற்றும் தென்றல் நகர், தெற்கு வெங்காநல்லூர், முதுகுடி, செட்டியார்பட்டி பகுதியில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நடந்தது. இவைகளை பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்து மருத்துவ சிகிச்சையை துவக்கி வைத்தார். இதில் விருதுநகர் மேற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ், மேற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் வக்கீல் துரைமுருகேசன், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் வனராஜ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் ராஜ்பிரியம், தெற்கு ஒன்றிய செயலாளர் நவரத்தினம், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் அழகாபுரியான், மேலப்பாட்டம் கரிசல்குளம் பஞ்சாயத்து தலைவர் லட்சுமி அழகாபுரியான் மற்றும் முன்னாள் கவுன்சிலர்கள், மாவட்ட மகளிரணி இணை செயலாளர் அழகுராணி, பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>