×

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் தேடப்பட்டவர் சென்னையில் கைது தேனிக்கு அழைத்து வந்து சிபிசிஐடி போலீசார் விசாரணை


தேனி, பிப். 12: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் தேடியவரை சென்னையில் போலீசார் கைது செய்தனர். அவரை, சிபிசிஐடி போலீசார் தேனிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில், சென்னை கீழ்பாக்கத்தைச் சேர்ந்த தருண்மோகன் (26) என்பவரை, தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து, அவரது விபரங்களை முக்கிய விமான நிலையங்களின் குடியுரிமை அதிகாரிகளிடம் அளித்திருந்தனர். இதனிடையே, நேற்று முன்தினம் சிங்கப்பூரிலிருந்து  சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கிய தருண்மோகனை, அங்குள்ள போலீசார் பிடித்து சிபிசிஐடி போலீசுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து தருண்மோகனை சிபிசிஐடி போலீசார் தேனி அலுவலகத்துக்கு நேற்று காலை அழைத்து வந்து இரவு வரை விசாரணை நடத்தினர்.  

இதில், ‘பொறியியல் பட்டதாரியான தருண்மோகன், இது தொடர்பான படிப்புக்காக சிங்கப்பூரில் ஓராண்டு காலம் தங்கியிருந்தது தெரிய வந்தது. இவ்வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட ஒரு மாணவரின் தந்தை நீட் தொடர்பாக பேசிய நபருடன், தருண்மோகன் தொடர்பில் இருந்துள்ளார். இதனால், சிபிசிஐடி போலீசார் தருண்மோகனை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். நேற்று ஏற்கனவே கைதான மாணவர் ஒருவரின் தந்தையை, சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்திருந்த போலீசார், அவருக்கும் தருண்மோகனுக்கும் தொடர்பு இருக்கிறதா என விசாரித்துள்ளனர். இதில், இருவருகும் தொடர்பு இல்லை என தெரிய வந்துள்ளது. இதையடுத்து மாணவரின் தந்தை அனுப்பி வைக்கப்பட்டார். இதையடுத்து எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்ற நிபந்தைனையின்பேரில் தருண்மோகனை, அவரது தந்தையுடன் அனுப்பி வைத்தனர். மேலும், இந்த வழக்கு விசாரணை முடியும் வரை தருண்மோகனின் பாஸ்போர்ட் முடக்கப்படும் என தெரிய வந்துள்ளது. 

Tags : Chennai ,Theni ,CPCIT ,
× RELATED தேனி புதிய பஸ்நிலையம் அருகே பை-பாஸ்...