×

தனியார் நிதி நிறுவனம் ரூ.பல லட்சம் மோசடி பாதிக்கப்பட்டவர்கள் எஸ்பியிடம் புகார்

தேனி, பிப். 12: தேனி அருகே உள்ள அரண்மனைப்புதூரைச் சேர்ந்த சுப்புராஜ் தலைமையில் சுமார் 10க்கும் மேற்பட்டோர், தேனி எஸ்பி அலுவலகத்தில் நேற்று அளித்த புகார் மனு அளித்தார். இது குறித்து சுப்புராஜ் கூறுகையில், ‘தேனியில் கான்வென்ட் எதிரே உள்ள ஒரு தனியார் நிதிநிறுவனத்தில் அரண்மனைப்புதூரைச் சேர்ந்த ஏராளமானோர் ரூ.50 லட்சம் வரை சிட்பண்ட் முறையில் பணத்தை செலுத்தினர். ரூ.10 ஆயிரம் செலுத்தினால் ரூ.20 ஆயிரம் தருவார்கள் என்ற ஆசையில் பலர் இத்திட்டத்தில் சேர்ந்து பணத்தை முதலீடு செய்தனர். ஆனால், நிதி நிறுவனம் முதிர்வு காலம் முடிந்தும் பணத்தை திருப்பித்தரவில்லை. இதற்கு பதிலாக குடியிருக்க தகுதியில்லாத பகுதியில் உள்ள நிலத்தை பெற்றுக்கொள்ளுமாறு முதலீடு செய்தவர்களுக்கு நிதி நிறுவனம் தரப்பு பதிலளித்தது. எனவே, முதலீடு செய்தவர்களுக்கு, அவர்களுக்கான முதிர்வு தொகையை முழுமையாக பெற்றுத்தர வேண்டும். மோசடியான நிதி நிறுவனத்தை சீல் வைக்க வேண்டும். நிதி நிறுவன உரிமையாளர் சொத்துக்களை பறிமுதல் செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை வழங்க வேண்டும்’ என கூறினார்.

Tags : Victims ,institution ,SP ,
× RELATED ரஷ்யாவில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள்...