×

சுருளியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு

கம்பம், பிப். 12:தேனி மாவட்டம், கம்பம் அருகே சுருளி அருவி உள்ளது. இது சுற்றுலாத்தலமாகவும், புண்ணியஸ்தலமாகவும் விளங்குகிறது. இங்கு பூதநாராயணன்கோயில், வேலப்பர் கோயில், ஆதி அண்ணாமலையார் கோயில், சுருளிமலை ஸ்ரீஐயப்பன் கோயில், கன்னிமார் கோயில் ஆகியவை உள்ளன. இதனால் ஏராளமான சுற்றுலாப் பயணிகளும், பக்தர்களும் சுருளி அருவிக்கு வந்து செல்கின்றனர். தூவானம் அணை தண்ணீரும், ஈத்தக்காடு, அரிசிப்பாறை பகுதி ஊற்றுத் தண்ணீரும் சுருளி அருவிக்கு வருகிறது. இந்நிலையில், தை அமாவாசையை முன்னிட்டு நேற்று அதிகாலையில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சுருளிக்கு வந்தனர். அருவியில் குளிக்க வனத்துறை அனுமதிக்காததால் ஏமாற்றம் அடைந்தனர். பின்னர் அருகே உள்ள ஆற்றில் குளித்து தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து, ஆத்மா சாந்தி வழிபாடு நடத்தினர்.தொடர்ந்து அங்குள்ள கோயில்களில் வழிபாடு நடத்தினர். அன்னதானம், வஸ்த்திர தானம் செய்தனர். கம்பம் இன்ஸ்பெக்டர் சிலைமணி தலைமையில் ராயப்பன்பட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில், கம்பத்திலிருந்து 15க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்

Tags : ancestors ,
× RELATED மூதாதையரில் எத்தனை பேரைத் தெரியும்?