×

தேனியில் பைரவி பேபி கிளினிக் திறப்பு விழா

தேனி, பிப். 12: தேனி சிவராம் நகரில் சி-2 திட்டச்சாலையில் சிங்கப்பூர் லைன் எதிரே, பைரவி பேபி கிளினிக் திறப்பு விழா நடந்தது. தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை பொதுச்செயலாளர் டி.ராஜ்மோகன் தலைமையேற்று திறந்து வைத்தார். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி வடக்கு மாவட்ட அவைத்தலைவர் ஜெய்முருகேஷ் வரவேற்றார்.  ஜி.ஹைச் ரோடு நாடார்கள் முன்னேற்ற சங்க தலைவர் வி.ஜோசப், தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை சொத்துபாதுகாப்புக்குழு செயலாளர் கே.கே.ஜெயராமன், மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் கண்ணாயிரம், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் காமராஜ், ஜி.ஹைச் ரோடு நாடார் முன்னேற்ற சங்க துணைத்தலைவர் காளிமுத்து, பெருந்தலைவர் மக்கள் கட்சி மாவட்ட தலைவர் அருள்பிரகாஷ் உட்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். டாக்டர்கள் காமராஜன், வசந்தமலர் அனைவரையும் வரவேற்று மரியாதை செலுத்தினர்.

Tags : Bhairavi Baby Clinic Opening Ceremony ,Theni ,
× RELATED தேனி புதிய பஸ்ஸ்டாண்டில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு