தை அமாவாசை விழா

சிங்கம்புணரி, பிப்.12: சிங்கம்புணரியில் ஜீவசமாதி அடைந்த சித்தர் முத்துவடுகநாதர் கோயிலில் தை மாத அமாவாசையை முன்னிட்டு நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் சித்தருக்கு பால், தயிர், சந்தனம், பழச்சாறுகள், வாசனை திரவியங்கள் என 21 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து வண்ண மலர் அலங்காரத்தில் சித்தர் முத்துவடுகநாதர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சிங்கம்புணரி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Related Stories:

>