பரமக்குடியில் டூவீலரில் சென்ற பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த 3 மர்ம நபர்கள் ஒன்றரை பவுன் தங்க செயினை பறித்தனர்

பரமக்குடி, பிப்.12: பரமக்குடியில் டூவீலரில் சென்ற பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த 3 மர்ம நபர்கள் ஒன்றரை பவுன் தங்க செயினை பறித்து சென்றனர். பரமக்குடி சோமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி மனைவி அம்பிகா. இவர் பேருந்து நிலையம் அருகே பெண்கள் அழகு நிலையம் வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு கடையை அடைத்துவிட்டு தனது வீட்டிற்கு டூவீலரில் சென்றுள்ளார். காட்டுபரமக்குடி முத்தையா கோவில் அருகே சென்றபோது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்கள் அம்பிகாவின் கழுத்தில் கிடந்த ஒன்றரை பவுன் தங்க செயினை பறித்துக்கொண்டு தப்பினர். அப்போது நிலை தடுமாறி வாகனத்திலிருந்து கீழே விழுந்து காயமடைந்த அம்பிகா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அம்பிகா கொடுத்த புகாரின் பேரில் பரமக்குடி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பரமக்குடியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் செயின் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>