×

மூதாட்டிக்கு உதவிய வெளிநாடுவாழ் தமிழர்கள்

சாயல்குடி, பிப்.12: சாயல்குடி அண்ணாநகரில் வசிப்பவர் மூதாட்டி சண்முகதாய். இவரது கணவர் இறந்துவிட்டார். இவரின் மகளும் கணவரை இழந்து இரண்டு குழந்தைகளுடன் வறுமையில் வாழ்ந்து வருகிறார். இருவரும் கிடைக்கின்ற கூலி வேலை செய்து வருகின்றனர். கொரோனா காலம் முதல் கடுமையான வறுமையால் வாடி வந்தனர். இந்நிலையில் இவர்களது வீடு சமீபத்தில் பெய்த கனமழையால் இடிந்து சேதமானது. எனவே வாடகைக்கு சிறு வீட்டில் குடியிருந்து வருகின்றனர். இவர்களின் ஏழ்மை நிலையை அறிந்த வெளிநாட்டில் வாழ்கின்ற தமிழக தொழிலாளர்கள், டிரைவர்கள் இணைந்து ஆறு மாதத்திற்கு தேவையான அரிசி, பலசரக்கு சாமான்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினர். செலவிற்கு பணமும் கொடுத்து உதவினர்.

இது குறித்து வெளிநாடுவாழ் தமிழக தொழிலாளர்கள் கூறுகையில், ‘‘சிங்கப்பூர், மலேசியா, கத்தார் போன்ற வளைகுடா நாடுகளில் தமிழகத்தை சேர்ந்த பலர் கட்டிடம், கடல் உணவகங்கள் உள்ளிட்ட வணிகம் சார்ந்த நிறுவனங்கள், டிரைவர் என கூலி தொழில் செய்து வருகிறோம். இதில் பெரும்பாலும் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அதிகமாக உள்ளோம். கொரோனா காலத்தில் வருமானம் இன்றி தவிக்கும் போது, ஒன்றிணைந்து உதவ முடிவு செய்தோம், சம்பளத்தில் ஒரு பகுதியை சேமித்து இது போன்ற ஏழை மக்களுக்கு உதவி வருகிறோம்’’ என்றனர்.

Tags : Tamils ,
× RELATED மகளிர் நோய்களும் சித்த மருத்துவமும்!