×

முதுகுளத்தூரில் பாழடைந்த கட்டிடத்தில் இயங்கும் சத்துணவு முட்டை குடோன் உயிர்ப்பலி ஏற்படும் அபாயம்

சாயல்குடி, பிப்.12: முதுகுளத்தூர் யூனியன் அலுவலக வளாகத்தில் சேதமடைந்து கிடக்கும் பழைய கட்டிடத்தில் சத்துணவு முட்டை குடோன் இருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. முதுகுளத்தூர் யூனியன் அலுவலகத்திற்கு ஒன்றியத்திலுள்ள 48 பஞ்சாயத்துகளை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு பணிகளுக்காக அலுவலக வேலை நாட்களில் வந்து செல்கின்றனர். வளாத்திலுள்ள சார்நிலை கருவூலம், குழந்தை நல அலுவலகம், உதவி செயற்பொறியாளர் அலுவலகம் போன்றவற்றிற்கும், யூனியன் அலுவலகத்திற்கும் அலுவலர்கள், ஊழியர்கள் வந்து செல்கின்றனர். தற்போது பஞ்சாயத்து தலைவர்கள், உதவி தலைவர்கள், கவுன்சிலர்கள், ஊராட்சி செயலர்கள் பல்வேறு பணிகளுக்காக வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் வளாகத்திற்குள் ஒருங்கிணைந்த பழைய அலுவலக கட்டிடம் ஒன்று உள்ளது. இங்கு சத்துணவு முட்டைகள் வைக்கப்பட்டுள்ளன.

இதனை வேலை நாட்களில் அலுவலக ஊழியர்கள், சத்துணவு அமைப்பாளர்கள் வந்து எடுத்து செல்கின்றனர். கட்டிடம் முழுமையாக சேதமடைந்து இடியும் தருவாயில் அரசு ஊழியர்கள் வந்து செல்வதால் விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது.
மேலும் அலுவலகத்திற்கு வரும் பொது மக்கள் விபத்தை உணராமல் நிழலுக்காக இந்த கட்டிடம் உள்ள பகுதியில் சென்று அமருகின்றனர். அலுவலகத்திற்கு வருவோர் இருசக்கர, நான்குசக்கர வாகனங்களையும் அதனருகே நிறுத்துகின்றனர். கட்டிடத்தின் மேற்கூரை உள்ளிட்ட அனைத்து பகுதியும் முற்றிலும் சேதமடைந்து இடியும் நிலையில் இருப்பதால், விபத்து ஏற்படும் முன்பு பழைய கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள், அலுவலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : building ,Mudukulathur ,
× RELATED தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும்...