×

அழகர்கோவில் நூபுர கங்கையில் நீராட பக்தர்கள் குவிந்தனர்

அலங்காநல்லூர், பிப். 12:  தை, ஆடி அமாவாசை நாட்களில் புனித தலங்களில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம். அதன்படி நேற்று தை அமாவாசையையொட்டி மதுரை அழகர்கோவில் மலைமேல் உள்ள நூபுர கங்கை தீர்த்தத்தில் புனித நீராட அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர். பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து நூபுர கங்கையில் புனித நீராடிய பின், அங்குள்ள ராக்காயி அம்மனுக்கு அபிஷேக பொருட்கள் வழங்கி வழிபட்டு சென்றனர். பின்னர் வரும் வழியில் சோலைமலை முருகன் கோயிலிலும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தை அமாவாசையையொட்டி நூபுர கங்கை ராக்காயி அம்மன், உற்சவர் வள்ளி தெய்வானையுடன் சமேத சுப்பிரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

Tags : Devotees ,Algarve ,Nupura Ganga ,
× RELATED திருப்பதி கோயிலில் பக்தர்கள் கூட்டம்: 18 மணிநேரம் காத்திருந்து தரிசனம்