×

பாஜ பல்வேறு தரப்பில் அழுத்தம் கொடுத்தாலும்; தவெக தனித்துப் போட்டியில் உறுதி: புதுவை வேட்பாளர்களை இறுதி செய்கிறார் நடிகர் விஜய்

 

சென்னை: பாஜ மேலிடம் பல்வேறு தரப்பில் இருந்து அழுத்தம் கொடுத்தாலும், தவெக தனித்துப் போட்டி என்பதில் உறுதியாக உள்ளது. புதுவையில் போட்டியிடும் வேட்பாளர்களை தவெக இன்று இறுதி செய்கிறது. தமிழகத்தில் எப்படியும் தோற்றுவிடுவோம் என்று கருதும் பாஜ மற்றும் அதிமுகவினர் தவெகவினரை கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்று தீவிரம் காட்டினர். குறிப்பாக நகர் பகுதிகளில் தவெக 2வது இடம் வகிப்பதால் அக்கட்சிக்கு பயம் வந்து விட்டது. இதனால் எப்படியாவது, எந்த விலை கொடுத்தாவது தவெகவை தனது கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ தீவிரம் காட்டியது. இதற்காக நடிகர் பவன்கல்யாணையும் களத்தில் இறக்கியது.

தவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் நடிகர் விஜயோ, கூட்டணி தொடர்பாக யாரும் என்னை தொடர்பு கொள்ளக்கூடாது. என் தலைமையில் தேர்தலை சந்திப்பவர்கள் மட்டுமே எங்கள் கூட்டணிக்கு வரலாம் என்று கூறிவிட்டார். இந்தநிலையில், டெல்லிக்கு விசாரணைக்கு வரும்படி சிபிஐ அழைத்தது. சிபிஐ மூலம் தொல்லை கொடுத்தால் பயந்துபோய் கூட்டணிக்கு வருவார் என்று கணக்குப் போட்டது. ஆனால் விசாரணையை சந்திக்க தயார் என்று சுமார் 8 மணி நேரத்துக்கு மேல் விசாரணையில் ஒத்துழைப்பு கொடுத்த விஜய், கூட்டணி தொடர்பாக யாரையும் சந்திக்க மறுத்து விட்டார்.

அதேநேரத்தில் புதுவையில் பாஜ, என்ஆர்காங்கிரஸ் கூட்டணி பங்கீடு முடிந்து தொகுதிகள் அறிவிக்கப்பட்டு விட்டது. இதனால் புதுவையில் தவெக தனித்துப் போட்டியிடும் நிலை உருவாகியுள்ளது. புதுவை வேட்பாளர்களை அறிவப்பதற்காக இன்று நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் வேட்பாளர்களை இறுதி செய்ததாக கூறப்படுகிறது. இன்று வேட்பு மனு தாக்கல் தொடங்குவதால் புதுவைக்கான வேட்பாளர்களை அறிவிக்கும் சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது. புதுவையில் கூட்டணி இல்லை என்பதால், தமிழகத்திலும் அதே நிலையை கடைப்பிடிக்க விஜய் முடிவு செய்துள்ளார்.

ஆனால் அதிமுகவின் ஐடி விங்க் மற்றும் சில யூடியூப்பர்கள் மூலம் தகவல்களை கசியவிட்டு கூட்டணிக்குள் விஜயை சம்மதிக்க வைக்கும் முயற்சியில் அதிமுக இறங்கியது. ஆனால் அதற்குள் விஜய் இடம் கொடுக்கவில்லை. அவர் தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளரை இறுதி செய்து விட்டார். விரைவில் வேட்பாளரை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Bahja ,Daveka ,Vijay ,Chennai ,TAKEKA ,BAJA ,ADAMUGAVINAR ,
× RELATED துணை முதல்வர் என்ற பேச்சுக்கே...