×

திண்டுக்கல்லில் முன்னோர்களுக்கு தர்ப்பண வழிபாடு

திண்டுக்கல், பிப். 12: திண்டுக்கல்லில் தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்பணம் செய்து பக்தர்கள் வழிபாடு நடத்தினர். திண்டுக்கல் கோபால் சமுத்திரகரையில் தை அமாவாசையை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். தமிழகத்தில் தை அமாவாசையும் ஆடி அமாவாசையும் சிறப்புப் பெற்றதாகும். இதையடுத்து திண்டுக்கல் கோபால் சமுத்திரக் கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர் இதேபோல அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோயில், வைகை ஆறு உட்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் தர்ப்பணம் நடந்தது.

Tags : ancestors ,Dindigul ,
× RELATED திண்டுக்கல்-நத்தம் ரோட்டில்...