×

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,17,680க்கு விற்பனை..!!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,17,680க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை வார இறுதி நாளான நேற்று முன்தினம் பவுனுக்கு ரூ.1,120 குறைந்தது. வெள்ளியும் கிலோவுக்கு ரூ.10 ஆயிரம் சரிந்தது. தங்கம் விலை கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து ஏற்றம், இறக்கத்துடன் இருந்து வருகிறது. வார தொடக்க நாளான கடந்த 9ம் தேதி தங்கம் விலை ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 19,600க்கு விற்பனையானது. தொடர்ந்து 10ம் தேதி ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 20,400 ஆகவும், 11ம் தேதி ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 20,960 என விலை உயர்ந்தது. தொடர்ந்து கடந்த 12ம் தேதி தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.1,200 குறைந்து ஒரு பவுன் 1 லட்சத்து 19,760க்கு விற்பனையானது.

வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.560 குறைந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 19,200க்கு விற்றது. இந்நிலையில், வார கடைசி நாளான நேற்று முன்தினம் தங்கம் விலை மேலும் குறைந்தது. அதாவது, நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.140 குறைந்து ஒரு கிராம் ரூ.14,760க்கும், பவுனுக்கு ரூ.1,120க்கு குறைந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 18,080க்கும் விற்றது. தங்கத்தை போல வெள்ளி விலையும் நேற்று முன்தினம் அதிரடியாக குறைந்தது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து, ஒரு கிராம் ரூ.280க்கும், கிலோவுக்கு ரூ.10 ஆயிரம் குறைந்து பார் வெள்ளி ரூ.2.80 லட்சம் ஆகவும் விற்கப்பட்டது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை. இந்த நிலையில், இன்று மார்க்கெட் தொடங்கியதும் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,17,680க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.14,710க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 குறைந்து ஒரு கிராம் ரூ.276-க்கும் ஒரு கிலோ ரூ.2,76,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags : Chennai ,
× RELATED சென்னை மாதவரத்தில் போலீசார் நடத்திய...