திருச்சி மாநில மாநாட்டிற்கு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக சார்பில் 10 லட்சம் நிதி

தேன்கனிக்கோட்டை, பிப்.12:  திருச்சியில் நடைபெறும் 11வது மாநில மாநாட்டிற்கு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக சார்பில் ₹10 லட்சம் நிதியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் பிரகாஷ் எம்எல்ஏ வழங்கினார். திமுகவின் 11வது மாநில மாநாடு திருச்சியில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் முதன்மைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நேரு தலைமையில் முடுக்கி விடப்பட்டுள்ளது. மாநில மாநாட்டிற்கு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக சார்பில் 10 லட்சம் நிதியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம், முதன்மை செயலாளர் நேரு முன்னிலையில் பிரகாஷ் எம்எல்ஏ வழங்கினார். அப்போது, எம்எல்ஏக்கள் முருகன், சத்யா ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories:

>