கார் மோதி வியாபாரி பலி

பர்கூர் அருகே ஜெகதேவி கிராமத்தைச் சேர்ந்தவர் பாபீர்அலி(45). இவர், குதிரையில் ஊர் ஊராக சென்று முத்து, மணிமாலைகளை வியாபாரம் செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, பர்கூரில் இருந்து கிருஷ்ணகிரிக்கு திரும்பிக் கொண்டிருந்தார். சுண்டம்பட்டியில் வந்தபோது அங்குள்ள மரத்தில் குதிரையை கட்டி விட்டு, எதிர்புறம் உள்ள கடைக்கு செல்ல சாலையை கடந்தார். அப்போது, அவ்வழியாக வந்த கார் மோதியது. இதில், தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த பாபீர்அலி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்த தகவலின்பேரில், கந்திகுப்பம் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், ஒரு வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>