×

குமரி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களில் ‘பேக்கேஜ்’ டென்டர் முறைக்கு தலைவர்கள் எதிர்ப்பு

நாகர்கோவில், பிப்.12: குமரி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களில் ‘பேக்கேஜ்’ டென்டர் முறைக்கு தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
குமரி மாவட்ட ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள் கூட்டம் நாகர்கோவிலில் அரசு விருந்தினர் மாளிகையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஊராட்சி ஒன்றியங்களின் தலைவர்கள் கலந்துகொண்டனர். பின்னர் கூட்டமைப்பு தலைவராக திருவட்டார் ஒன்றிய குழு தலைவர் ஜெகநாதன், செயலாளராக அகஸ்தீஸ்வரம் ஒன்றிய குழு தலைவர் அழகேசன், பொருளாளராக குருந்தன்கோடு ஒன்றிய குழு தலைவர் அனுஷாதேவி, துணைத் தலைவராக மேல்புறம் தலைவர் ஞானசவுந்தரி, துணை செயலாளராக தோவாளை ஒன்றிய குழு தலைவர் சாந்தினி பகவதியப்பன், செயற்குழு உறுப்பினர்களாக தக்கலை தலைவர் அருள் ஆன்டனி, முன்சிறை தலைவர் ராஜேஷ்வரி, பொதுக்குழு உறுப்பினர்களாக ராஜாக்கமங்கலம் தலைவர் ஐயப்பன், கிள்ளியூர் தலைவர் கிறிஸ்டல் ரமணிபாய் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.

ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் நடைபெற வேண்டிய டென்டர்கள் ‘பேக்கேஜ்’ என்ற பெயரில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் டென்டர் நடைபெறுவதை நிறுத்தி அந்தந்த ஊராட்சி ஒன்றியத்தின் மூலமாக டென்டர் நடத்த மாவட்ட கலெக்டர், தமிழக முதல்வரை கேட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அந்தந்த ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு பள்ளிகளில் பராமரிப்பு பணிகளுக்காக ஒதுக்கப்படும் பணியை 2020 முதல் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் பேக்கேஜ் டென்டர் முறையில் டென்டர் விடுவதை நிறுத்தி முன்பு போன்று அந்தந்த ஊராட்சி ஒன்றியத்தில் டென்டர் நடத்த மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு விழாக்களிலும் அந்தந்த ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்களுக்கும் முறையான அழைப்பு விடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

Tags : Leaders ,Kumari ,
× RELATED ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க...