×

குடியாத்தம் அருகே ஒற்றை யானை மீண்டும் அட்டகாசம்

குடியாத்தம் பிப்.12: குடியாத்தம் அருகே ஒற்றை யானை நேற்று அதிகாலை மீண்டும் அட்டகாசம் செய்தது. ஆந்திரா- கர்நாடகா வனப்பகுதியின் மத்தியில் யானைகள் சரணாலயம் உள்ளது. இங்கிருந்து அவ்வப்போது யானைகள் வெளியேறி தமிழக எல்லைக்குள் நுழைந்து விடுகிறது. குறிப்பாக, வேலூர் மாவட்டம் குடியாத்தம் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் யானைகள் அடிக்கடி நுழைந்து விடுவதால் கிராம மக்கள் பீதியடைகின்றனர்.

குடியாத்தம் அடுத்த கதிர்குளம், கொட்டமிட்டப்பள்ளி, மோர்தானா உள்ளிட்ட கிராமங்களில் இரவு நேரங்களில் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. கடந்த சில வாரங்களாக ஒற்றை பெண் யானை கே.மோட்டூர் கிராமத்திற்குள் நள்ளிரவு நுழைந்து விவசாய நிலங்களை ேசதப்படுத்திவிட்டு அதிகாலையில் தப்பிவிடுகிறது.

இதேபோன்று நேற்று அதிகாலையும் கே.மோட்டூர் கிராமத்திற்குள் ஒற்றை யானை நுழைய முயன்றது. இதையறிந்த கிராம மக்கள் ஒன்று திரண்டு பட்டாசுகள் வெடித்தும், மேளம் அடித்தும் யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். இருப்பினும் எப்போது வேண்டுமானாலும் மீண்டும் யானை வரலாம் என்பதால் இதற்கு நிரந்தர தீர்வு காண போதிய நடவடிக்கைகளை வனத்துறையினர் மேற்கொள்ள வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Gudiyatham ,
× RELATED கிராமத்திற்குள் நுழைய முயன்ற ஒற்றை...