×

அணைக்கட்டு அருகே பரபரப்பு: எருது விடும் விழாவில் போலீஸ் தடியடி காளைகள் முட்டியதில் 14 பேர் காயம்

அணைக்கட்டு, பிப்.12: அணைக்கட்டு தாலுகா வேலங்காடு கிராமத்தில் தை அமாவாசையையொட்டி 54ம் ஆண்டு எருது விடும் விழா நேற்று நடந்தது. உதவி ஆணையர் (கலால்) பூங்கொடி தலைமை தாங்கி விழாவை தொடங்கி வைத்தார். தாசில்தார் குமார், விஏஓ சங்கீதா முன்னிலை வகித்தனர். விழாக்குழுவினர் உறுதிமொழி ஏற்றதும் காலை 10 மணியளவில் எருதுவிடும் விழா தொடங்கியது. விழாவில், 250 காளைகள் பங்கேற்று சீறிப்பாய்ந்து ஓடியது. முதலிடம் பிடித்த காளையின் உரிமையாளருக்கு 60 ஆயிரம் உட்பட மொத்தம் 45 பரிசுகள் வழங்கப்பட்டது. பாய்ந்து ஓடிய காளைகள் முட்டியதில் பார்வையாளர்கள் 10 பேருக்கு காயம் ஏற்பட்டது.

இதேபோல், அத்தியூர் கிராமத்தில் நடந்த காளை விடும் விழாவுக்கு மாவட்ட ஆய்வு குழு அலுவலர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். தாசில்தார் முருகன், வருவாய் ஆய்வாளர் பூங்கோதை முன்னிலை வகித்தனர். விழாவில் 70 காளைகள் சீறிப்பாய்ந்து ஓடியது. காளைகள் முட்டியதில் 4 பேர் காயம் அடைந்தனர். விழாவையொட்டி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், விழாவில் உள்ளூர் மாடுகளே அதிக சுற்றுகள் ஓடியதாக கூறி 12.50 மணிக்கே போலீசார் விழாவை நிறுத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விழாக்குழுவினர் மற்றும் காளை உரிமையாளர்கள் கோஷமிட்டனர். தொடர்ந்து, காளைகள் ஒட்டி வந்தவர்கள் அப்படியே ஓடவிட்டனர். இதில் வாடிவாசலில் வைக்கப்பட்டிருந்த பேரிகார்டை உடைத்து கொண்டு மாடுகள் ஒடியது. இதனால் போலீசார் வாடிவாசல் அருகே மாடுகளுடன் நின்றிருந்தவர்கள் மீது லேசான தடியடி நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags : dam ,
× RELATED பைக்காரா அணையின் நீர்மட்டம் சரிவு ; படகு சவாரிக்கு 100 படிகள் இறங்க வேண்டும்