×

கோயில் திருவிழா பிரச்னையில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள் குடியாத்தத்தில் பரபரப்பு

குடியாத்தம், பிப்.12: அம்மன் கோயில் திருவிழா பிரச்னையில் குடியாத்தம் காவல் நிலையத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. குடியாத்தம் அடுத்த லிங்குன்றம் கிராமத்தில் அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் திருவிழா நடத்துவது வழக்கம். அதன்படி, கடந்த வாரம் ஒன்றுகூடிய கிராம மக்கள் கோயில் திருவிழாவை விமரிசையாக நடத்த முடிவு செய்தனர். இதில் ஒவ்வொரு குடும்பத்தினரும் திருவிழாவுக்கு எவ்வளவு தொகை தர வேண்டும் என்பதையும் முடிவு செய்துள்ளனர்.

இதில், ஒரு குடும்பத்தினர் மட்டும் கோயில் விழாவுக்கு பணம் தராததால், அவர்களை கிராம மக்கள் ஊரை விட்டு ஒதுக்கிவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் குடியாத்தம் டவுன் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில், போலீசார் லிங்குன்றம் கிராமத்தை சேர்ந்த நிர்வாகிகளை நேற்று காவல் நிலையம் அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது, கோயிலுக்கு நிதி அளிக்காத குடும்பத்தினர் மீது கிராம நிர்வாகிகளும் புகார் அளித்துள்ளனர். இருதரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்து காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் இருதரப்பினரையும் சமரசம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

Tags : police station ,
× RELATED வெறுப்பு பேச்சு: பிரதமர் மோடி மீது...