×

சிவன்மலை தேர்த் திருவிழா தற்காலிக கடைகள் வாடகை வசூலில் முறைகேடு

காங்கயம்,பிப்.12: காங்கயம் அருகே உள்ளது பிரசித்தி பெற்ற சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோயில். இங்கு கடந்த 8ம் தேதின்று தைப்பூசத் தேரோட்டம் துவங்கி 3 நாட்களாக நடைபெற்றது. வழக்கம்போல இந்த ஆண்டும் கரும்பு கடையில் துவங்கி பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் துணிக்கடைகள் இரும்பு கடைகள் என பல்வேறு தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டது.

இந்த கடையை சிவன்மலை சுகுமாரன் என்பவர் ரூ.8 லட்சத்திற்கு ஏலம் எடுத்தார். 500க்கும் மேற்பட்ட தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டது. இதில் அரசு விதிகளுக்கு புறம்பாக ஒப்பந்ததாரர் அதிக வாடகை வசூல் செய்வதுடன் வாடகை வசூல் செய்வதற்கான உரிய ரசீது வழங்கப்படவில்லை என கடை உரிமையாளர்கள் புகார் தெரிவித்தனர்.

மேலும் சிறிய கடைகளுக்கு கூட ரூ.5 ஆயிரம்  முதல் பத்தாயிரம் ரூபாய் என வாடகை வசூல் செய்ததாகவும் தங்களுடைய லாப பணம் முழுவதுமே வாடகைக்கு செல்வதால் இந்த ஆண்டு போதிய அளவு லாபம் இல்லை எனவும் குற்றம் சாட்டினர்.  தற்போது வழங்கப்பட்டுள்ள வாடகை ரசீதில் எவ்வளவு ரூபாய் வாடகை என்பது குறித்து எதுவும் குறிப்பிடாமல் வழங்கப்படுகிறது. இது குறித்து கேட்டால் கடையை காலி செய்ய சொல்லி மிரட்டுவதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ஒப்பந்ததாரர் மீண்டும் இந்த கடை ஏலங்களில்  கலந்து கொள்ளாமல் தடைசெய்து  நடவடிக்கை எடுக்க வேண்டும் என தற்காலிக  கடை உரிமையாளர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது குறித்து காங்கயம் பீ.டி.ஓ. ரமேஷ் கூறியதாவது: தற்காலிக கடைகள் ஏலம் எடுத்த ஒப்பந்ததார் மீது பல்வேறு புகார்கள் வந்துள்ளது. வாடகை வசூல் செய்யும் ரசீதில் வாடகை எவ்வளவு என குறிப்பிடுவது இல்லை. இது குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது. பின்பு அபராதம் விதிக்கப்படும். என அவர் தெரிவித்தார்.

Tags : shops ,Sivanmalai Election Festival Temporary ,
× RELATED அறந்தாங்கியில் நகை, பாத்திர கடைகளில் பயங்கர தீ