×

பள்ளி,கல்லூரிகளில் ெகாரோேனா வைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி

அவிநாசி,பிப்.12;அவிநாசி அரசு கலைஅறிவியல் கல்லூரியில் கொேரானோ வைரஸ் குறித்த தற்காப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியை, கணினி அறிவியல்துறை தலைவர் ஹேமலதா ஒருங்கிணைத்தார். அவிநாசி வட்டார மருத்துவர் சக்திவேல் கரோனா வைரஸ் குறித்த தகவல்களை மாணவர்களிடையே விரிவாக எடுத்துரைத்தார். வட்டார சுகாதார கண்காணிப்பாளர் சக்திவேல் வைரஸ் தடுப்பு முறைகள் பற்றியும் தற்காப்பு நடவடிக்கையாக, கைகளை சுத்தமாக கழுவ எட்டு விதமான முறைகளை மாணவ மாணவிகளுக்கு செய்முறை விளக்கமளித்தார். வட்டாரசுகாதார ஆய்வாளர் ரமேஷ், நாம் பயன்படுத்துகின்ற தண்ணீரில் நீரில் குளோரின் அளவை கண்டறிய செய்முறை விளக்கம் அளித்தார்.

இதில் மாணவர்கள் போராசிரியர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.இதே போல், அவிநாசி அரசு மகளிர்மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியை மெஹருன்னிசா தலைமை தாங்கினார். ஆசிரியை ஜெயலட்சுமி வரவேற்றார். சேவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஜெயலட்சுமி கலந்து கொண்டு, கரோனா வைரசைக் குறித்து விளக்கி பேசினார். இதில், இந்த கொரோனோ வைரஸானது விலங்கிலிருந்து பரவுகிறது.  ஒருவர் இருமும் போதும்,   தும்மும் போதும்  பரவுகிறது. அதனால் நாம் கைகளை நன்கு கழுவ வேண்டும். பாதிப்பு இருப்பது தெரிந்தால், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று டாக்டரை பார்க்க வேண்டும். பொது இடங்களில் இருந்து வீட்டுக்குள் வந்தால் உடனே நாம் கைகளை நன்கு கழுவ வேண்டும் என்றார்.  இதைதொடர்ந்து, கைகளை எப்படி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து பகுதி சுகாதார செவிலியர் தேன்மொழி செயல் விளக்கம் அளித்தார்.

Tags : schools ,colleges ,
× RELATED பிரதமர் ரோடு ஷோவில் மாணவர்கள்...