சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர்,பிப்.12:திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் கடந்த அக்டோபர் முதல் இந்த ஆண்டு ஜனவரி வரை என கடந்த 4 மாதங்களாக உணவூட்டும் செலவின தொகையை வழங்கப்படவில்லை. இது குறித்து பல்வேறு முறை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளரிடமும், மாநகராட்சி ஆணையாளரிடமும் பேச்சுவார்த்தை எந்த முன்னேற்றமும் இல்லை.

இதனால் 136 சத்துணவு மையங்களில் உணவு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையை கண்டித்து உடனடியாக உணவூட்டும் செலவின தொகையை வழங்க கோரி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் திருப்பூர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு, சத்துணவு ஊழியர் சங்க மாநகராட்சி தலைவர் மகேந்திரபூபதி தலைமை வகித்தார். மாநகராட்சி செயலாளர் ஆதிலட்சுமி, மாவட்ட செயலாளர் ராமசாமி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க செயலாளர் பாஸ்கரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை விளக்கி கோஷங்களை எழுப்பினர்.

Related Stories:

>