மதுரை: சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்க உள்ள நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்களை அகற்றும் பணிகள் தொடங்கின. மேலும், அரசு வாகனங்களில்; ஜி.பி.எஸ். கருவிகள் பொருத்தும் பணியும் தொடங்கியது.
