பஸ்சில் பயணி திடீர் சாவு

ஈரோடு,  பிப். 12:  கோபிசெட்டிபாளையம் கரட்டடிபாளையம் குமணன் வீதியை சேர்ந்தவர்  பழனிசாமி (50). இவர் சொந்த வேலை காரணமாக வேலூர் மாவட்டத்துக்கு  சென்றிருந்தார். அங்கிருந்து அவர் ஈரோடு வருவதற்காக நேற்று முன்தினம் பஸ்  ஏறினார். அந்த பஸ் ஈரோட்டுக்கு நேற்று முன்தினம் அதிகாலை வந்தது. அப்போது  அனைத்து பயணிகளும் இறங்கினர். ஆனால் பழனிசாமி இறங்காமல் இருக்கையில்  இருந்தார். இதனால் டிரைவர் அவரை எழுப்ப முயன்றபோது அவர் மயங்கி கிடந்தது  தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அதே பஸ்சில் அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக  ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த  டாக்டர்கள் ஏற்கனவே பழனிசாமி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து  ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>