×

தை அமாவாசையையொட்டி வீரராகவ பெருமாள் கோயிலில் குவிந்த பக்தர்கள்

திருவள்ளூர்: தை அமாவாசையான நேற்று திருவள்ளூர் ஸ்ரீவைத்திய வீரராகவ பெருமாள் கோயிலில், திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். திருவள்ளூரில் மிகவும் பழமை வாய்ந்த வீரராகவ பெருமாள் கோயில் உள்ளது. வைத்திய வீரராகவர் என அழைக்கப்படும் இக்கோயிலில், அமாவாசை தினங்களில் தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வர்.

நேற்று தை அமாவாசை என்பதால் நேற்றுமுன்தினம் இரவே ஆயிரக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரம், சென்னை மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்து கோயில் வளாகம் மற்றும் மண்டபங்களில் குவிந்தனர். அவர்கள் நேற்று அதிகாலை கோயில் குளக்கரையில் நீராடி, கோயிலுக்குள் சென்று நீண்ட வரிசையில் காத்திருந்து, மூலவரை தரிசித்தனர். திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கோயிலுக்குள் குவிந்ததால் திருவள்ளூர் டவுன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags : Devotees ,warrior ,occasion ,Perumal Temple ,Thai ,
× RELATED கோவை வெள்ளிங்கிரி மலையில் ஏறிய 3 பக்தர்கள் மூச்சு திணறி பலி