×

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எதிர்கால சுகாதார சேவையை மேம்படுத்த புதிய தொழில்நுட்பம் மற்றும் முன்முயற்சி: ப்ரீதா ரெட்டி தகவல்

சென்னை: தேனாம்பேட்டையில் உள்ள அப்போலோ புற்றுநோய் மையத்தின் மருத்துவ வல்லுநர்கள் வங்கதேசத்தை சேர்ந்த 15 வயது நோயாளிக்கு டியூப்லெஸ் வீடியோ அசிஸ்டெட் தொரகோஸ்கோபிக் என்ற புதிய சிகிச்சை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வெற்றிகரமாக சிகிச்சை அளித்துள்ளனர். இந்த குறைந்தபட்ச துளையிடல் - ஊடுருவல் சிகிச்சை முறை இந்தியாவில் முதல் முறையாக செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அப்போலோ புற்றுநோய் மைய தொராசிக் புற்றுநோயியல் நிபுணர் மற்றும் ஆலோசகர் டாக்டர் அபிஜித் தாஸ் கூறுகையில், ‘வங்கதேசத்தை சேர்ந்த நஹின் ஹசன் என்ற நோயாளிக்கு இடது தொடை எலும்பு  எவிங்கின் சர்கோமா நோயால் பாதிக்கப்பட்டது. அவரது உடலில் எந்த குழாயையும் நுழைக்காமல், நுரையீரல் மெட்டாஸ்டாஸிஸ் முடிச்சுகளை அகற்ற குறைந்தபட்ச  ஊடுருவல் - துளையிடல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த செயல்முறை  வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு அடுத்த நாள் நோயாளி சிகிச்சை முடிந்து  மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

அப்போலோ மருத்துவமனைகள் குழும துணை தலைவர் ப்ரீதா ரெட்டி கூறுகையில், ‘உலக சுகாதார அமைப்பின் புள்ளி விவரங்களின்படி நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எதிர்கால சுகாதார சேவையை மேம்படுத்துவதற்காக புதிய தொழில்நுட்பம் மற்றும் முன்முயற்சிகளுடன் அப்போலோ செயல்படுகிறது. வளாகத்தை உரிய சுகாதார நெறிமுறைகளுடன் பாதுகாப்பாக வைத்திருக்க அப்போலோ புற்றுநோய் மையங்கள் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றன. டியூப்லெஸ் வாட்ஸ் செயல்முறை நுரையீரல் புற்றுநோய்க்கான சிகிச்சையில் ஒரு சிறந்த முன்னேற்றமான நடைமுறை ஆகும்.  சில நோயாளிகளுக்கு ஒரே நாளில் அறுவை சிகிச்சை செய்து அவர்களை வீடுகளுக்கு அனுப்பி வைக்க முடியும்,’ என்றார்.

Tags : cancer patients ,
× RELATED திரளான பக்தர்கள் தரிசனம் புற்று...