×

ஆன்லைன் வகுப்பு புரியாததால் பிளஸ் 1 மாணவன் தற்கொலை

பெரம்பூர்: கொளத்தூர் காமராஜர் நகர் முதல் தெருவை சேர்ந்தவர் முருகன் மகன் பிரவீன் (16). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்த இச்சிறுவன் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். தகவலறிந்து வந்த கொளத்தூர் போலீசார், உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, சிறுவன் எழுதிய கடிதம் ஒன்று போலீசாரிடம் கிடைத்தது. அதில், ‘‘நான் கடந்த 10 மாதங்களாக ஆன்லைன் வகுப்பில் பாடம் பயின்று வந்தேன். ஆனால், அதில் ஆசிரியர்கள் கூறுவது புரியவில்லை. தற்போது, பள்ளிக்கு சென்றால், ஆன்லைன் வகுப்பில்  நன்றாக படித்தால் தான் இப்போது நாங்கள் நடத்தும் வகுப்புகள் புரியும். இல்லையென்றால் எதுவும் புரியாது என கூறினர்,  இதனால், நான் கல்லூரியில் சேர்ந்து படிக்க முடியும் என்ற நம்பிக்கை போய்விட்டது. வேதனையில் தற்கொலை செய்து கொள்கிறேன்,’’ என உருக்கமாக எழுதி இருந்தது.

Tags : student ,suicide ,
× RELATED கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய...