×

ஆசிய மகளிர் கால்பந்து செமிபைனலில் ஆஸ்திரேலியா

பெர்த்: ஏஎப்சி மகளிர் ஆசிய கோப்பை 2026 கால்பந்து காலிறுதிப் போட்டியில் நேற்று, ஆஸ்திரேலியா – வடகொரியா அணிகள் மோதின. போட்டியின் 9வது நிமிடத்தில் ஆஸியின் அலானா கென்னடி சிறப்பாக ஆடி முதல் கோல் போட்டார். 47வது நிமிடத்தில் ஆஸியின் சாம் கெர் மேலும் ஒரு கோல் போட்டு அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றார். 2வது பாதியில் வடகொரியா அணி வீராங்கனைகள் கோல் போட தீவிர முனைப்பு காட்டினர்.
65வது நிமிடத்தில் அந்த அணியின் சே உன் யாங் தனது அணியின் முதல் கோலை போட்டார். அதன் பின் கோல் விழவில்லை. எனவே, 2-1 என்ற கோல் கணக்கில் ஆஸி மகளிர் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினர். இன்று நடக்கும் மற்றொரு காலிறுதியில் சீனா-சீன தைபே அணிகள் மோதுகின்றன. இதில் வெல்லும் அணியுடன் அரையிறுதியில் ஆஸி அணி மோதும்.

Tags : Australia ,Asian Women's Football Semi-Final ,Perth ,North Korea ,AFC Women's Asian Cup 2026 football quarter-final ,Alana Kennedy ,Sam… ,
× RELATED சில்லி பாய்ன்ட்…