×

அனுமதியின்றி இயங்கும் ‘பார்’ கண்டுகொள்ளாத காவல்துறை

பல்லடம், பிப். 11: திருப்பூர் மாவட்டம் பல்லடம், கோவை பைபாஸ் சாலையில் ஒரு தனியார் பேமிலி ரெஸ்டாரன்ட் செயல்படுகிறது. இதற்கு பின்புறம் விசாலமான இடத்தில் தனியார் ‘பார்’ செயல்படுகிறது. இது, அரசு அனுமதியின்றி இயங்குகிறது. இங்கு, 24 மணி நேரமும் டாஸ்மாக் சரக்கு விற்பனை செய்யப்படுகிறது. மது பிரியர்கள் அன்றாடம் குவிந்தவண்ணம் உள்ளனர். இங்கு, ரூ.150 மதிக்கத்தக்க ஒரு குவாட்டர், ரூ.200-க்கு விற்கப்படுகிறது. ரூ.150 மதிப்புடைய பீர் ரூ.190-க்கு விற்கப்படுகிறது.  இதுதவிர, பெரும்பாலான மதுபானங்களில் டூப்ளிகேட் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு விற்கப்படுகிறது. இந்த ‘பார்’ குறித்து காவல்துறையினர் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை, எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை எனவும் புகார் கூறுகின்றனர். காரணம், முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருவர் துணையுடன் இந்த ‘பார்’ இயங்குவதாக கூறப்படுகிறது.


Tags : bar ,
× RELATED பார் அசோசியேசன் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல்