×

கோவை- ராமேஸ்வரம் ரயில் ரத்து ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

உடுமலை, பிப்.11: கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின் தற்போது பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டபோதும், பொள்ளாச்சி, உடுமலை மார்க்கத்தில் எந்த ரயிலும் இயக்கப்படவில்லை. பயணிகள் நலன் கருதி நிறுத்தப்பட்ட அனைத்து ரயில்களையும் மீண்டும் இயக்குமாறு பொள்ளாச்சி எம்.பி. சண்முகசுந்தரம், கோவை, மதுரை எம்.பி.க்கள் ரயில்வே நிர்வாகத்துக்கு கடிதம் எழுதி வலியுறுத்தி வந்தனர். அதில், கோவை- ராமேஸ்வரம் ரயில் இயக்கப்படாது. அதற்கு பதிலாக மங்களூரில் இருந்து ராமேஸ்வரத்துக்கு வாரம் இருமுறை இயக்கப்படும் ரயிலை பொள்ளாச்சி, உடுமலை, பழனி, மதுரை செல்லும் பயணிகள் பயன்படுத்திக்கொள்ளலாம். கோவை- நாகர்கோவில் ரயிலில் இணைக்கப்பட்டிருந்த தூத்துக்குடி ரயில் தற்போது முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மதுரை- கோவை இடையே எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படாது என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags : Coimbatore ,train cancellation ,railway administration ,
× RELATED கோவையில் மிக பிரமாண்டமான கிரிக்கெட்...