×

தடாகம் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கும் செங்கல் சூளைகளை மூட நீதிமன்றம் பரிந்துரை சமூக ஆர்வலர்கள் மகிழ்ச்சி

கோவை, பிப். 11: கோவை துடியலூர் அருகே உள்ள தடாகம் பகுதியில் யானைகள் வழிதடம் மற்றும் சட்ட விரோதமாக இயங்கி வரும் செங்கல் சூளைகளை மூட தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு அப்பகுதி சமூக ஆர்வலர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கோவை துடியலூர் அருகே உள்ள சின்னதடாகம், வீரபாண்டி, சோமையம்பாளையம், நஞ்சுண்டாபுரம், பன்னிமடை உள்ளிட்ட ஐந்து ஊராட்சிகளில் 180க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இயங்குகின்றன. இவை தமிழக அரசின் விதிமுறைகளுக்கு எதிராக செயல்படுவதாக, சமூக ஆர்வலர்கள் பல ஆண்டுகளாக புகார் தெரிவித்து வருகின்றனர். செங்கல் சூளைகள் காரணமாக அப்பகுதி முழுவதும் மாசு அடைந்துள்ளதாகவும், அதிக அளவு கனிம வளங்கள் கொள்ளை அடிக்கப்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர். மேலும் யானைகள் வழித்தடத்தை ஆக்கிரமித்தும் செங்கல் சூளைகள் இயங்குவதாக குற்றம்சாட்டு உள்ளது.
இது குறித்து சமூக ஆர்வலர் கனேஷ் கூறுகையில், ‘‘கடந்த 2019ம் ஆண்டு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 4 அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டு தடாகம் பகுதியில் உள்ள செங்கல் சூளைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இது தொடர்பாக ஆய்வறிக்கை கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம்

அதில் 183 செங்கல் சூளைகள் சட்டத்திற்கு புறம்பாக விதிகளை மீறி இயங்குகிறது. சுற்றுச்சூழல் பாதிப்பு, சுவாச பிரச்சனை, அதிக அளவு கனிம வளங்கள் சுரண்டி எடுப்பு என அவர்கள் அந்த அறிக்கையில் குறிப்பிட்டு 183 செங்கல் சூளைகளையும் மூட பரிந்துரை செய்துள்ளனர். இதனிடையே தற்போது சமூக ஆர்வலர்கள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது,’’ என்றார்.

Tags : activists ,court ,area ,Lake ,
× RELATED கோவில்பட்டியில் இந்தியா கூட்டணி...