ஊட்டி - கோழிப்பண்ணை சாலை சீரமைக்கப்படுமா?

ஊட்டி, பிப்.11: ஊட்டியில் இருந்து தலைகுந்தா செல்லும் மாற்றுப்பாதையில் பழுதடைந்துள்ள நகராட்சிக்கு சொந்தமான ஊட்டி - கோழிப்பண்ணை சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

ஊட்டியில் இருந்து கலெக்டர் அலுவலகம், பாரஸ்ட்கேட், காந்திநகர் வழியாக தலைகுந்தாவிற்கு ஒரு மாற்றுப்பாதை செல்கிறது. இச்சாலை, ஊட்டியில் இருந்து கோழிப்பண்ணை வரை நகராட்சிக்கும், அங்கிருந்து தலைகுந்தா வரை நெடுஞ்சாலைத்துறைக்கும் சொந்தமாக உள்ளது. கோடை சீசனின் போது, புறநகர் பகுதிகளில் இருந்து ஊட்டி நகரை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது.இந்நிலையில், இச்சாலைேயாரங்களில் விவசாய நிலங்கள் அதிகளவு உள்ளதால், அந்த நிலங்களில் இருந்து வரும் தண்ணீர் தேங்கியும், சேறும் சகதியுமாக மாறி சாலை அடிக்கடி பழுதடைந்து விடுகிறது. இதனால், இச்சாலையில் பெரும்பாலான இடங்களில் பெரிய பள்ளங்கள்

இதில், சிறிய வாகனங்கள் செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. இந்நிலையில், இச்சாலையில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சாலையான தலைகுந்தா முதல் கோழிப்பண்ணை வரை தற்போது நெடுஞ்சாலைத்துறை சீரமைத்துள்ளது. ஆனால், நகராட்சிக்கு சொந்தமான சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. நகராட்சிக்குட்பட்ட சாலை மிகவும் சேதமடைந்துள்ளது. அந்த சாலையை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories:

>