×

ஊட்டியில் கடும் பனி பொழிவால் 1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது

ஊட்டி, பிப்.11: ஊட்டியில் மீண்டும் பனியின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் நேற்று காலை 1 டிகிரி செல்சியசாக வெப்பநிலை பதிவாகியிருந்தது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் முதல் பிப்ரவரி மாதம் இறுதி வரை பனிப்பொழிவு அதிகமாக காணப்படும். பெரும்பாலான நாட்கள் உறைப்பனி கொட்டி தேயிைல தோட்டம், மலை காய்கறி தோட்டம் மற்றும் புல்வளிகள் வெண்மை நிறத்தில் காட்சியளிக்கும். இ்ச்சமயங்களில் தேயிலை தோட்டங்கள், மலை காய்கறிகள் பாதிக்கும். மேலும், பல நாட்கள் 5 டிகிரி செல்சியசிற்குள் வெப்பநிலை செல்லும். இது போன்ற சமயங்களில் கடும் குளிரும் வாட்டும். குறிப்பாக, ஊட்டி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் குளிரின் தாக்கம் மிக அதிகமாக காணப்படும். இந்நிலையில், இம்முறை துவக்கத்தில் பனிப்பொழிவு குறைந்து காணப்பட்ட போதிலும், தற்போது உறைப்பனியின் தாக்கம் மிக அதிகமாக காணப்படுகிறது. கடந்த இரு நாட்களாக பனி கொட்டி வருகிறது. அதிகாலை நேரங்களில் தாவரவியல் பூங்கா, குதிரை பந்தய மைதானம், தலைகுந்தா காமராஜ்சாகர் அணை, சாண்டிநல்லா, சூட்டிங்மட்டம் போன்ற பகுதிகளில் புல்வெளிகளில் உறைப்பனி வெண்மை கம்பளம் விரித்தார் போல், வெண்மை படர்ந்து காணப்பட்டது. இதனால், கடும் குளிர் நிலவியது. இது மட்டுமின்றி ஊட்டி அருகே உள்ள பைக்காரா, அவலாஞ்சி, அப்பர்பவானி போன்ற பகுதிகளிலும் பனியின் தாக்கம் மிக அதிகமாக காணப்பட்டது. ஊட்டியில் நேற்று காலை குறைந்தபட்ச வெப்பநிலையாக 1 டிகிரி செல்சியஸ் பதிவாகியிருந்தது. இதனால், குளிர் வாட்டியது. மேலும், அதிகாலை நேரங்களில் குளிரை தாங்க முடியாமல் பொதுமக்கள் அங்காங்கே தீ மூட்டி குளிர் காய்ந்தனர். தேயிலை தோட்டங்கள் மற்றும் மலை காய்கறி தோட்டங்களுக்கு வேலைக்கு சென்ற தொழிலாளர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.இன்னும் ஒரு வாரத்திற்கு பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பகலில் கடும் வெயில், இரவில் கடும் பனி பொழிவால் மாறுபட்ட காலநிலை நீடிக்கிறது. இதனால், பொதுமக்களும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர். காய்ச்சல், தலைவலி போன்ற தொல்லைகளால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

Tags : degree Celsius ,Ooty ,
× RELATED தமிழ்நாட்டில் இன்று முதல் 5...