×

மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள போர் சூழலால் உலகளவில் பொது அமைதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் : ஐ.நா.கவலை

நியூயார்க் : மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள போர் சூழலால் உலகளவில் பொது அமைதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஐ.நா.கவலை தெரிவித்துள்ளது. ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் படைகளின் தாக்குதலால் மத்திய கிழக்கில் 14வது நாளாக நேற்றும் போர் நீடித்தது. அமெரிக்கா, இஸ்ரேல் படைகளுக்கு பதிலடி கொடுத்து வரும் ஈரான், பாரசீக வளைகுடாவில் உள்ள குறுகலான ஹார்முஸ் ஜலசந்தியை மூடி உள்ளது. அரபு நாடுகளில் இருந்து இவ்வழியாகத்தான் எண்ணெய் கப்பல்கள் பிற நாடுகளுக்கு பயணித்து வருகின்றன. உலகின் 20 சதவீத எண்ணெய் விநியோகம் நடக்கும் இக்கடல் பாதையில் பயணிக்கும் கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணை வீசி தாக்கி வருகிறது. நேற்று முன்தினம் இந்தியா வந்து கொண்டிருந்த தாய்லாந்து கப்பல் உட்பட 3 வணிக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன.

இதனிடையே ஐ.நா. பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்டரஸ் வெளியிட்ட சமூக வலைத்தளப் பதிவில், வளைகுடா நாடுகளில் விரிவடைந்து வரும் மோதல், பொது மக்களுக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தி இருப்பதாக கூறினார். அனைத்து தரப்பினரும் பதற்றத்தை தனித்துக் கொண்டு பேச்சுவார்த்தைக்கு முன் வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். மத்தியக் கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழல் ஒட்டுமொத்த உலகத்தின் அமைதிக்கும், பாதுகாப்பிற்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி இருப்பதாகவும் குறிப்பிட்ட அவர், தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தை மூலமாக மட்டுமே பிரச்சனைகளுக்கு தீர்வுகாண வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

Tags : West Asia ,UN ,New York ,Middle East ,US ,Iran ,United ,States ,Israel ,
× RELATED துபாயில் மையப்பகுதியில் மீண்டும் டிரோன் தாக்குதல்