போதையில் தவறி விழுந்தவர் சாவு

விருதுநகர்,பிப்.11: விருதுநகர் அருகே நென்மேனியை சேர்ந்த பால்பாண்டி, பட்டம்புதூர் பஸ் ஸ்டாப் அருகே மது போதையில் கீழே விழுந்து கிடந்துள்ளார். விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்க்கப்பட்டவர், சிகிச்சை பெறாமல் தன்னிச்சையாக வெளியேறி வீடு திரும்பி சென்றுள்ளார். மறுநாள் தலைவலிப்பதாக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சூலக்கரை போலீசில் மகன் ஆனந்த் புகாரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>