×

கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது

விழுப்புரம், மார்ச் 13: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். விழுப்புரம் மருதூர் ஏரிக்கரை அருகே கஞ்சா விற்பனை செய்வதாக வந்த புகாரின்பேரில் நகர காவல் நிலைய போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த வாலிபர்களை பிடித்து சோதனையிட்ட போது அவர்களிடம் ஒரு கிலோ 80 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த வானவராயன்(25), மணி(26) என்பதும் அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Viluppuram ,Buharinbar ,Vilupuram Marathur Lake ,
× RELATED திருக்கோவிலூர் அருகே பாஜக பிரமுகர் காரில் ரூ.4,32,000 பறிமுதல்