×

திருவில்லிபுத்தூரில் ஒரு ஆண்டில் போக்குவரத்து விதிகளை மீறியதாக ஒரு லட்சத்து 15 ஆயிரம் வழக்குகள்

திருவில்லிபுத்தூர், பிப்.11: திருவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போக்குவரத்து விதிகளை மீறியதாக ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 795 வழக்குகள் காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் விபத்துக்களை தடுக்கும் நோக்கத்தோடு மத்திய, மாநில அரசுகள் சார்பில் சாலை பாதுகாப்பு வாரம் கொண்டாடப்பட்டு வந்தது. தற்போது அது சாலை பாதுகாப்பு மாதமாக மாற்றப்பட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி, பேரணி, நாடகங்களை வட்டார போக்குவரத்துத்துறை அதிகாரிகள், போக்குவரத்து காவல்துறையினர் மற்றும் போலீசார் நடத்தி வருகின்றனர். ஆனாலும், போக்குவரத்து விதிமீறல் காரணமாக விபத்துகள் நடைபெற்று வருகின்றன.கடந்த 2020ம் ஆண்டு போக்குவரத்து விதிகளை மீறியதாக ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 795 வழக்குகள் திருவில்லிபுத்தூர் காவல்நிலைய உட்கோட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருவில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், வேகமாக வாகனம் ஓட்டுதல், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுதல், சீட் பெல்ட், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுதல் என போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது விபத்தை தடுக்கும் நோக்கத்தோடு கடுமையான நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது. திருவில்லிபுத்தூரில் உள்ள காவல் நிலையங்களில் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 795 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

Tags : Srivilliputhur ,
× RELATED ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன்...