சாத்தூரில் உயிரிழந்த விவசாயிகளுக்கு காங். கட்சி சார்பில் அஞ்சலி

சாத்தூர்,பிப்.11: வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி உயிர் நீத்த விவசாயிகளுக்கு சாத்தூரில் காங்கிரஸ் கட்சி சார்பாக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் சார்பில் 70 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இடபபோராட்டத்தின் போது 20க்கு மேற்பட்ட விவசாயிகள் போராட்ட களத்தில் உயிரிழந்தனர்.இந்நிலையில் சாத்தூர் முக்குராந்தல் பகுதியில் சாத்தூர் காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரெங்கசாமி தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடி உயிர் நீத்த 20க்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Related Stories:

>