இரட்டை அகல ரயில்பாதை அமைக்க விருதுநகரில் ரயில்வே அதிகாரிகள் ஆய்வு

விருதுநகர், பிப்.11: விருதுநகர் வழி செல்லும் மதுரை-கன்னியாகுமரி நான்குவழிச் சாலையில் மாவட்ட விளையாட்டு அலுவலகம் எதிரே மேம்பாலத்தில் இருவழிப்பாதை பழைய மேம்பாலமும், மற்றொரு இருவழிப்பாதை புதிய மேம்பாலமும் உள்ளது. பழைய மேம்பாலத்திற்கு கீழ் ஒரு ரயில் தடத்திற்கான அகலமாக இருக்கிறது. இரு வழித்தடமாக மாற்றினால் பாலத்திற்கு கீழ் இடமில்லை. இதனால் ரயில்வே முதன்மை பொறியாளர், துணை பொறியாளர்கள்(கட்டுமானம்) மற்றும் ரயில்வே அதிகாரிகள் மேம்பாலத்திற்கு கீழ் ரயில்வே தண்டாவாளப்பகுதியில் உயரம், அகலம் உள்ளிட்டவற்றை அளந்து ஆய்வு செய்தனர். மேம்பாலத்தை இடித்து விட்டு, புதிய மேம்பாலம் கட்டுவதற்கான மதிப்பீடு தயாரிப்பதற்கான ஆய்வு என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories:

>