கண்டமனூர் வனச்சரகத்தில் மான்கள் இறப்பு அதிகரிப்பு பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்தது

குஜிலியம்பாறை, பிப்.11: குஜிலியம்பாறை அருகே ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் முன்பகுதி சிலாப் மேற்கூரை நேற்று இடிந்து விழுந்தது. பள்ளி விடுமுறையால் அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அருகே ஆர்.கோம்பை ஊராட்சி ஆணைக்கவுண்டன்பட்டியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 25 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். ஒரு தலைமை ஆசிரியர், உதவி ஆசிரியர் என இரண்டு பேர் பணிபுரிகின்றனர். இப்பள்ளி கடந்த 1996-97ம் ஆண்டு கட்டப்பட்டது. கடந்த 2018-2019ம் ஆண்டு பராமரிப்பு பணி செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று காலை இப்பள்ளியின் முன்பகுதி கட்டிடத்தின் சிலாப் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இடிந்து விழுந்த கட்டிடத்தில் சிமெண்ட் கலவைகள் முழுவதும் பெயர்ந்து, கம்பிகள் முழுவதும் வெளியே தெரிந்தபடி உள்ளது. பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி விடுமுறை தினமாக உள்ளதால் மாணவ, மாணவியர் அசம்பாவித சம்பவத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பினர்.

Related Stories:

>